Breaking News

ஹிருனிகாவை ஏன் கைது செய்ய முடியாது?

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை ஏன் கைது செய்ய முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

நபர் ஒருவரை கடத்திச் சென்று அச்சுறுத்தியதாக ஹிருனிகா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஏனைய நபர்களை கைது செய்து நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யாமை நல்லாட்சியின் அடையாளமாகுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பொரளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளை வான் கலாச்சாரத்திற்கு பதிலாக தற்போது டிபென்டர் ரக கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.