Breaking News

‎வலி.வடக்கு‬ பாதுகாப்பு வலய விடுவிப்பு பற்றி ஜனாதிபதி தலைமையில் பலாலியில் ஆராய்வு.

தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 15,16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் குறித்த தொகை காணிகளை விடுவிப்பது தொடர்பில் அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் வருகையின் போது உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் வடக்கு பகுதிகளில் 6 ஆயிரத்து 450 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்தன. மைத்திரி தலைமையிலான ஆட்சி அமைந்தபின்னர் இவற்றில் 1118 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. 

அதேபோன்று வலிகாமம் கிழக்கு-வளலாய் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 621 ஏக்கர் காணிகளும் முழுமையாக விடுவிக்கப்பட்டன.

இன்னமும் 5 ஆயிரத்து 341 ஏக்கர் பொதுமக்களின் சொந்த நிலங்கள் படைத்தரப்பின் ஆக்கிரமிப்பில் உள்ளமை குறி்ப்பிடத்தக்கது.