ஹிருணிகாவின் புரட்சிகர பதிவு இதோ
இலங்கையின் தனியார் ஊடகமொன்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பகிரங்கமாய் சவால் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள சவாலில், “குறித்த ஊடகத்தின் உரிமையாளர்களும், அவர்களின் சகோதரர்களும் விரைவில் சட்டப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
தமது முகநூலில்(face book) இல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஹிருனிகா, ஊடக தர்மத்தை மீறி குறித்த ஊடகம் தமது விடயத்தில் வீணான திரிபுகளை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை தாம் விரைவில் உண்மைக்காக போராடப்போவதாகவும் ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.குறித்த எச்சரிக்கை குறிப்பில் ஹேஷ் டேக் (# tag) இல் குறித்த வானொலிக்கு ஏற்றாற்போல் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முழுமையான முகநூல் பதிவினை காண,









