மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் மீடியாப்பண்ணைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்
இந்தச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த இராணுவத்தின் பேருந்தும் கொழும்பிலிருந்து வந்த கார் ஒன்றுமே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.








