Breaking News

சுதந்திரக் கட்சி புதிய கூட்டணியில் போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது புதிய கூட்டணியில் போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு குழுவுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ளத் தயார். சில தரப்பினருக்கு இதில் உடன்பாடு கிடையாது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான்காம் இடத்திற்கு தள்ளி ஐக்கிய தேசியக் கட்சியை முதலாவதாக மாற்ற முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜூன் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.