கேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கேப்பாப்புலவுப் பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று(திங்கட்கிழமை) மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கேப்பாபுலவு கிராமத்தில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமின் முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், இராணுவ முகாங்களுக்குள் தமது நூற்றுக் கணக்கான கால்நடைகள் இருப்பதாகவும் அவற்றை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.













