மன்னார் ஆயரின் ஆசியும் தமிழ் மக்கள் பேரவைக்கு கிடைத்தது
மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய
இராயப்பு ஜோசெப் ஆண்டகை அவர்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தித்து தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும், தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் தொடர்பாகவும், அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்த ஆயர் அவர்கள் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன் மற்றும் மன்னார் நகரசபை பிரதித்தலைவர் ஜேம்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.









