இலங்கையில் சித்திரவதை – அரசாங்கம் மறுப்பு
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேசத்திட்டம் இதனை தெரிவித்துள்ளது.புதிய அரசாங்கம் ஓராண்டு பூர்த்தியை நிறைவு செய்கின்றது.
எனினும், இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், சித்திரவதைகளும் தொடர்வதாகவும் அந்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.எவ்வாறாயினும், அந்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
இலங்கையில் சித்ரவதை சம்பவங்களோ, ஆட்கடத்தல் சம்பவங்களோ கடந்த ஆண்டில் இடம்பெற்றதாக தமக்குத் தெரியவரவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரம் இருந்தால் அதுகுறித்து விசாரனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.