வடக்கு முதல்வர் வலிகாமம் சென்றார்
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வலிகாமம் வடக்கு பகுதியை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கும், அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அவர் நேற்று விஜயம் செய்துள்ளார்.இதன்போது, மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துக் கொண்டார்.
இதன்போது, தெல்லிப்பளை பிரதேச செயலகரினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.வீதி, மின்சாரம், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீளமைப்பது மற்றும் பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன அவற்றுள் அடங்குகின்றன.
முன்னதாக நேற்று காலை இந்த பகுதிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.