குமார் குணரத்னத்திற்கு இன்றும் பிணையில்லை
முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான குமார் குணரத்னத்தை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்டவரான குமார் குணரத்னம், வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், கடந்த வருடம் நவம்பர் மாம் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
இவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நூறு நாட்களை கடந்து சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.