Breaking News

நியூசிலாந்து பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருகவுள்ள அவர், இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், வர்த்தக முதலீடுகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றைய தினம் இலங்கை வரும் நியூசிலாந்து பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நியூசிலாந்து பிரதமருக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு நியுசிலாந்து பிரதமருக்கு அரசதலைவருக்கான வரவேற்பு வழங்கப்படவுள்ளது.நியூசிலாந்துப் பிரதமர் தனது இலங்கை விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும், வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், வர்த்தக சங்க சம்மேளனத்தில் நடைபெறும் வர்த்தக தலைவர்களுடான சந்திப்பில் நியூசிலாந்துப் பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்.கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரசதலைவர்கள் மாநாட்டின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நியூசிலாந்தின் இரண்டாவது பிரதமர் ஜேன் கீ என்பது குறிப்பிடத்தக்கது.