Breaking News

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்(காணொளி)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். தற்போது வடக்கு முதல்வர் காரியாலயத்தில் ஐ.நா ஆணையாளர், வடக்கு முதல்வர் மற்றும் வட மாகாண அமைச்சர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.




குறித்த சந்திப்பையடுத்து, வடக்கிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் செல்லவுள்ள ஐ.நா ஆணையார், அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவார். அத்தோடு வட மாகாண ஆளுநரையும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

அதனையடுத்து, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் திருகோணமலைக்கு செல்லவுள்ளதோடு, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.