Breaking News

சம்பூரில் கடற்படை முகாமாக இருந்த 177 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு.

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்த 177 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் இன்று கையளிப்பதற்கான நிகழ்வு முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது

கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் இந்து ஆலயம் என்பனவும் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும் மீள்குடியேற்றப்பட்ட அம் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன. இவ் வீடுகளை கனடா தமிழ்ப் பேரவையினால் நிர்மாணிக்கப்பட்டு18 பேருக்கான வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகதி முகாம்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தமக்கு சொந்த வீடுகளில் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு சம்பூர் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.