ராஜபக்சக்கள் பெற்ற கடன்கள் செலுத்தப்படவில்லை – கயந்த
மஹிந்த ராஜபக்சக்கள் பெற்றுக் கொண்ட கடன்கள் செலுத்தப்படவில்லை என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாவங்களை இந்த அரசாங்கம் கழுவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் வீதி ஒப்பந்தக்காரர்களுக்கு மஹிந்த தரப்பு செலுத்தாமல் விட்டிருந்த 44 பில்லியன் ரூபாவினை செலுத்தியுள்ளுது என அவர் தெரிவித்துள்ளார்.








