Breaking News

புலிகள் தனிநபரால் தோற்கடிக்கப்படவில்லை! - கோத்தா

புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்டது ஒரு தனிநபராலோ அல்லது சிலராலோ முன்னெடுக்கப்பட்ட செயல் அல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். விசாரணைகளின் நிறைவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தனது இராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன இராணுவத்தளபதி பொன்சேகா நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூறலாம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், யுத்தத்தைக் நிறைவடையச் செய்ய விமானப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை போன்ற அமைப்புக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த நிலையில், இவற்றை எல்லாம் மறந்து எப்படி ஒருவர் மாத்திரம் இதனைச் செய்தார் என்று கூறுவது எனத் தெரிவித்தார்.