Breaking News

குண்டு துளைக்காத வாகனம் திருத்திக் கெடுக்கப்படவில்லை - மஹிந்த வருத்தம்

குண்டு துளைக்காத வாகனம் திருத்திக் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருத்தம் வெளியிட்டுள்ளார்.தமக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாகனம் பழுதடைந்துள்ளதாகவும் அதனை, பழுதுபார்த்து தருமாறும் கோரிய போதிலும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகனத்தை பழுதுபார்த்து கொடுக்குமாறு பணிப்புரை விடுத்த போதிலும் ஜனாதிபதியின் செயலாளர் அதனை செய்ய ஆர்வம் காட்டவில்லை மஹிந்த விசனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் அசமந்த போக்கினால் தமக்கு இதுவரையில் வாகனம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்த தமக்கு குண்டு துளைக்காத வாகனத்தை உடனடியாக வழங்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும், புனரமைக்கப்படுவதாக கூறி வருகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எத்தனைகாலம் இந்த இல்லத்தை புனரமைப்பார்கள் என்பது புரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.