Breaking News

பரந்தனில் நான்கு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

கிளிநொச்சி பரந்தன் பகுதியைச்சேர்ந்த நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை பாடசாலைக்குச்சென்ற நான்கு சிறுவர்களும் மாலை வரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்களை பல இடங்களில் தேடிய போதிலும் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லையென பெற்றோர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் உமையாழ்புரம் மற்றும் பரந்தன் 11 ஆம் ஒழுங்கையை சேர்ந்த சிறுவர்களே காணாமல் போயுள்ளனர். இவர்கள் தரம் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கின்ற 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என அவர்களது பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

காணாமல் போயுள்ள சிறுவர்கள் பாடசாலையில் கஞ்சா, பீடி போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பாடசாலை அதிபர் பெற்றோரிடம் முறைப்பாடுகள் செய்துள்ளார்.இதன்போது தாங்கள் இனி தவறுகள் செய்யமாட்டோம் என்று குறித்த மாணவர்கள் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் மீண்டும் பாடசாலையில் பீடிகள் பயன்படுத்துவதை கண்ட ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்த நிலையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளாாக பாடசாலையின் அதிபர் செ.அம்பிகபாகன் தெரிவித்துள்ளார்.