இழந்த தமிழ் மக்களின் வாக்குகளை மீளப்பெற பசில் வியூகம்!
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்ட ஒழுங்கமைப்பு மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரம் ஆகிய பொறுப்புக்கள் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பத்தரமுல்லையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில் பெசில் ராஜபக்ச தினமும் சந்திப்புக்களை நடத்திவருகின்றார்.
இந்த நிலையில் அவரிடமே இந்தப் பொறுப்புக்களை மஹிந்த அணியினர் ஒப்படைத்திருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இந்த மே தினக் கூட்டத்தில் கொழும்பிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களை அழைத்துச் செல்வதற்குரிய வியூகங்களை பெசில் ராஜபக்ச வகுத்து வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளில் ஏற்பட்ட சரிவே காரணமாக இருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் பெசில் களமிறங்கியிருப்பதாகவும் தகவல்க்ள தெரிவிக்கின்றன.