பாலியல் துஸ்பிரயோகத்தை மறைக்க இராணுவத்தால் அரங்கேற்றிய நாடகம்?
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி வெடிபொருட்களும் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், மரவன்புலவு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி – மரவன்புலவு பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவரை, இராணுவ அதிகாரி ஒருவர், இன்னுமொரு தமிழரின் உதவியுடன் கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
எனினும் குறித்த சிறுமி, அவர்களின் பிடியில் இருந்து தப்பியதை அடுத்து, குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.இதனை அடுத்து காவற்துறையினர் அந்த பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதுடன், அங்கிருந்த வீடொன்றில் தற்கொலை அங்கியை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.மறுநாள் அந்த வீட்டுக்குள் சென்ற புலனாய்வாளர்கள் குறித்த தற்கொலை அங்கியை மீட்ட செய்தியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன.
ஆனால் சிறுமி மீதான சிங்கள சிப்பாயின் பாலியல் துஸ்பிரயோக முயற்சி குறித்த செய்தி வெளியாக்கப்படவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் இல்லத்தில் ஏற்கனவே மீன்பிடிப்பதற்கான வெடிபொருட்களும் இருந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.