Breaking News

தேசிய பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு

எந்த அரசாங்கமானாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவது அதன் பொறுப்பாகும். இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீக்கப்படும் போதும், இராணுவம் அகற்றப்படும் போதும் நான் ஆரம்பம் முதலே புலனாய்வுத் துறையினரின் செயற்பாடு இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ஆரம்பம் முதலே எடுத்துக் கூறினேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தால் கூட்டு எதிர்க் கட்சி அதற்கு தனது ஒத்துழைப்பை வழங்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ,

ஒத்துழைப்பு வழங்க முன்னர் என்ன நடவடிக்கை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒத்துழைப்பதா? என்பதை தீர்மானிப்போம் எனவும் குறிப்பிட்டார்.