கொக்குத்தொடுவாயில் கிராமசேவகர் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல்! முதல்வர் கண்டனம்
முல்லைத்தீவு- கொக்கு தொடுவாய் வடக்கு கிராமசேவகர் சிங்கள மீனவர்களினால் தாக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
படையினர் வடக்கில்நிலைகொண்டுள்ளார்கள் என்னும் துணிவில் சிங்கள மக்கள் தாம் நினைப்பவற்றையெல்லாம் செய்யலாம் என நினைக்கிறார்கள். அது தவறாகும்.இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மேற்படி கிராமசேவகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொ டர்பாக முதலமைச்சர் மேலும் கூறுகையில்,
கடந்த 10ம் திகதி முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் சிங்கள மீனவர்கள் தொடர்பாக தகவல் பெறச் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம்.குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதுடன் 18ம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பிலும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டுவோம் என்றார்.
அமைச்சர்கள் மாற்றம் தொடர்பாக, மாகாணசபை அமைச்சர்களை மாற்ற வேண்டும் என 16 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்கள்.அது முதலமைச்சர் அமைச்சர்கள் தவிர உள்ள 24 பேரில் 16 பேர் 3ல் 2 பெரும்பான்மை என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டிருக்கின்றார்கள்.
இந்த இடத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் அமைச்சர்களை உடனடியாக வெளியேற்ற முடியாது என்பதுடன் நன்றாக சேவையாற்ற கூடியவர்களை வெளியில் வைத்திருக்கவும் முடியாது.மேலும் தற்போதுள்ள அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களும் இல்லை. எனவே இந்த விடயத்தை தீர ஆராய்ந்து தீர்மானத்தை எடுப்பேன்.
18ம் திகதி சந்திப்பு தொடர்பாக, வடமாகாணம், மேல் மாகாணம் ஆகியவ ற்றின் காணி பிணக்குகள் தொடர்பாக எதிர்வரும்18ம் திகதி ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.இதில் வடமாகாணத்தில் படையினர் வசம் உள்ள காணிகள் தொட ர்பாகவும், படையினர் சுவீகரிக்கவுள்ள காணிகள் தொடர்பாகவும் பேசவுள்ளேன்.
மேலும் சில அரசாங்க அதிகாரிகளினால் பிழையான தகவல் வழங்கப்படுவதை நா ன் அறிவேன். இந்நிலையிலேயே மாகாணசபை உறுப்பினர்களை பிரதேச செயலகங்களுக்கு பொறுப்பாக நியமித்தேன். அவர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் சரியான தகவல்கள் இருப்போர் அந்த தகவல்களை வழங்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








