Breaking News

நான் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை கடவுளே தீர்மானிப்பார்- முதல்வர்



நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை கடவுள் பார்த்துக்கொள்வார் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அடுத்த வடக்கு முதலமைச்சராக நீதித்துறையை சேர்ந்த ஒருவரை நியமிக்க சிலர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ‘இதுவரை எனக்கு எவரும் இது தொடர்பாக சொல்லவில்லை. என்னிடமே கேட்டுவருகின்றனர். இதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்