Breaking News

ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்கு சமாதான நீதவான் பதவி



கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சேவையை அங்கீகரித்து, அவர்களை உயர்ந்த பிரஜைகளாக்கும் வகையில், அவர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிகழ்வு இம்மாதம் 13ஆம் திகதி நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சமாதான நீதவான் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இதன் இரண்டாம் கட்டமாக நாட்டுக்கு நற்பெயர் பெற்றுத்தந்த விளையாட்டு சங்க வீர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு சங்க பிரதிநிதிகளுக்கும் இப்பதவி வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக நாட்டிலுள்ள சகல கிராமசேவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.