Breaking News

நம்பிக்கை இல்லாப் பிரேரணை : கட்சி ரீதியான முடிவின் பிரகாரம் அது கைவிடப்பட்டுள்ளது



ஓர் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவர இருந்தவேளையில் கட்சி ரீதியான முடிவின் பிரகாரம் அது கைவிடப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வட மாகாண சபையில் ஓர் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவர இருந்தது . அது தற்போது கைவிடப்பட்டுள்ளது.

சிலவற்றிற்கு கட்சி ரீதியில்தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்கு கட்சி ரீதியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் முன்னேற்றமும் காண ப்பட்டுள்ளது. கட்சி ரீதியான அடிப்படையில் தான் இப்பேற்பட்ட விடயங்களை தீர்க்க முடியும்.

இதன்பிரகாரமே தற்போது கை விட்டுள்ளனர் என நம்புகின்றேன். ஆகவே இதில் 38 பேரும் கை உயர்த்தி ஒருவரை குற்றவாளி எனக் கூறினாலும் அவர் குற்றவாளி ஆகமுடியாது. கை உயர்த்தி குற்றவாளி ஆக்க வேண்டாம்.

இவை தொடர்பில் சில நேரடியாக முடிவுகள் எடுக்கலாம் என்றார். இருப்பினும் கட்சி ரீதியான முடிவின் பிரகாரம் அது கைவிடப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.