எழுவர் விடுதலைக்கான பேரணி இன்று சென்னையில்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று சனிக்கிழமை சென்னையில் பேரணி இடம்பெறவுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் அரங்கிலிருந்து பேரணி நடத்தப்படும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகளாக சிறையிலுள்ள ஏழுபேரையும் விடுதலை செய்யக் கோரி, எழும்பூர் இராஜரத்தினம் அரங்கிலிருந்து தலைமைச் செயலகம் வரை வாகனத்தில் பேரணியாக சென்று முதலமைச்சர் ஜெயலிலதாவை சந்தித்து மகஜர் கையளிக்கப்படும் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று இடம்பெறவுள்ள பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திரையுலக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு அற்புதம்மாள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.