Breaking News

ஆதாரமின்றி கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது: சுவாமி குற்றச்சாட்டு



தமிழ்மக்களின் நன்மைக்காவே தான் செயற்படு வதாகவும் ஆதரமின்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விமர்சனங்களை முன்வைப்பதையிட்டு கவலை யடைவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியை மையமாககொண்டு செயற்படுகின்றது. அதுதொடர்பில் விஷேடமாக எமது அமைச்சு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அடிப்படை வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு கொடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் நன்மைக்காவே தான் செய்றபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.