வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை பார்வையிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தையும் பார்வையிட்டுள்ளார். அதேவேளை, இன்னும் மீள்குடியேற்றப்படாது முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடி உயர்ஸ்தானிகர் அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
பின்னர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்த உயர்ஸ்தானிகர், அவரிடம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் மாகாணத்திற்கான முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
முதலமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மீள்குடியேற்றம் தொடர்பில் விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.