Breaking News

வட மாகாண சபையுடன் கலந்துரையாடாது மத்திய அரசு செயற்படுகின்றது



ஸ்ரீலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தா னிகருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கு மிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண முதலமைச்சர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தமிழ் மக்களுக்கு நன்மை பயர்க்கின்றதா என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தன்னிடம் வினவியதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வடமாகாண சபையுடன் கலந்தாலோசிக்காது மத்திய அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்வதாக முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.