Breaking News

நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்



வவுனியா மடுக்குளம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமானப் படையினர் ஒத்துழைப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாக தெரிவித்த அவர், கொக்குவெளியில் இராணுவத்தினருக்கான நல்லிணக்க வீட்டுத்திட்டமும், கலாபோஸ்வெவ பகுதியில் கடந்த அரசாங்கத்தினால் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் 6 மாத காலத்திற்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த போதிலும் அதற்கான நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாட்டினால் நல்லாட்சி அரசாங்கம் மீதுள்ள நம்பிக்கை தமிழ் மக்களிடையே தற்போது குறைவடைந்து வருவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.