வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர் - THAMILKINGDOM வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர் - THAMILKINGDOM

 • Latest News

  வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர்  போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் கைப்பற்றிய 2 ஆயிரத்து 221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் திரும்ப கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

  பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் காணிகளை வைத்திருந்தாலும் பொது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தேவையான உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

  மேலும் காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக விசேட வீடமைப்பு வேலைத்திட்டம் ஒன்றையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

  இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 47 ஏக்கர் நிலத்தில் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

  வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் படையிருடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top