Breaking News

கோமாளிகள் புகழ் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்.



இலங்கையின் புகழ்பெற்ற நாடக மற்றும் திரைப்பட கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்று அழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் காலமானார்.

அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்படுகிறார்.

அதிக நகைச்சுவை நாடகப்பிரதிகளை உருவாக்கியுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1947ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பிறந்த அவர், தனது 69 வயதில் காலமானார்.