Breaking News

இராணுவ சிப்பாயின் தாக்குதலில் இருவர் வைத்தியசாலையில்



கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமு றையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தை ச்சோ்ந்த தந்தையும், மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது,

கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் (வயது 23) என்பவருமே தாக்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த இராணுவச் சிப்பாய் தமிழ் இளைஞன் எனவும் அண்மையில் இராணுவத்தில் இணைந்துக்கொண்டவர் தற்போது விடுமுறையில் வீடு சென்ற போதே அயல் வீட்டாரான மேற்படி தந்தையையும், மகனையும் கடந்த கால கொடுக்கல் வாங்கல் பிணக்கு ஒன்று காரணமாக தான் யார் என்று தெரியுமோ என்ற கடும் தொனியில் கேள்வி எழுப்பியவாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டு கிசிசைப்பெற்று வருகின்றவா்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடா்பில் குறித்த இராணுவ சிப்பாய் முழங்காவில் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டவா்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் விடுதலை செய்துள்ளனர்.