Breaking News

பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - 10 பேர் பலி

பீகார் மாநிலம் கயா அருகே உள்ள சோதாஹா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


 மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலியான சில வீரர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துழள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களும் ஆபத்தான நிலையில் உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.