சிவப்பு மஞ்சள் கொடிகளுடன் “எழுகதமிழ்“ காரர் வரப்படாது-தமிழரசுக்கட்சி (காணொளி) - THAMILKINGDOM சிவப்பு மஞ்சள் கொடிகளுடன் “எழுகதமிழ்“ காரர் வரப்படாது-தமிழரசுக்கட்சி (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  சிவப்பு மஞ்சள் கொடிகளுடன் “எழுகதமிழ்“ காரர் வரப்படாது-தமிழரசுக்கட்சி (காணொளி)

  இன்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில்
  எழுக தமிழ் நிகழ்வுக்கான பிரச்சார பணியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மகிழடித்தீவில் அமைந்துள்ள 1987/01/28 காலப்பகுதியில் ஆயுததாரிகளின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் நினைவுத் தூபியில் மஞ்சள் சிவப்பு நிற கொடியினால் அலங்கார வேலைகளை செய்து முடித்துவிட்டு அங்கு நின்றபோது முன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேந்திரன் அவர்களாலும் அவரது அடியாட்களாலும் தூபி அமைந்துள்ள இடத்தில் இருந்து வெளியேறுமாறு தகாத வார்த்தைகளாலும் திட்டியதோடு எழுக தமிழ் பிரச்சார பணியில் ஈடுபடும் இளைஞர்கள் தங்கள் கழுத்தில் தமிழரின் அடையாளத்தை குறிக்கும் மஞ்சள் சிவப்பு நிற துண்டுகளை அணியக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

  இடையிடையே நல்லிணக்க அரசைப்பற்றி புறம்கூறிவந்த அரியனேந்திரனுக்கு அண்மையில் கிழக்கிற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் நினைவுப்பரிசு வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


  இவர் தற்போதைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்

  அத்அதுடன்ந்த நிறுத்தாது இளைஞர்களை விசாரணை செய்யும் படி பொலிஸாருக்கு இரகசியமாக தொலைபேசியில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கூறியதால் இளைஞர்களை வீதியில்வைத்து வழிமறித்து விசாரணை செய்யப்பட்டதும் அவர்களது அடையாள அட்டை விபரங்களை பதிவு செய்து பொலீசார் விடுவித்துள்ளனர்.

  எழுக தமிழ் நிகழ்வு இங்கு பிரச்சார பணியில் ஈடுபடும் இளைஞர்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சிசிதரனும் நின்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு தமிழரசுக்கட்சி தனது நிறமாக பச்சையை தவிர்த்து சிவப்பு மஞ்சள் கலரினையே பயன்படுத்திவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


  தொடர்புடைய முன்னைய செய்தி  தொடர்புடைய முன்னைய செய்திகள்
  எழுக தமிழை ஏன் குழப்புகின்றீர்கள் -வியாளேந்திரன் எம்.பி. கேள்வி(காணொளி)
  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிவப்பு மஞ்சள் கொடிகளுடன் “எழுகதமிழ்“ காரர் வரப்படாது-தமிழரசுக்கட்சி (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top