தலைவர் பிரபாகரன் வீரராக விளங்குவதாக - ஞானசார தேரர் !
சிங்கள மக்களுக்கு மஹிந்த ராஜப க்ஷ எந்தவகையில் வீரராகத் விள ங்கிறாரோ அதேபோல தான் தமிழ் ம க்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிக ளின் தலைவர் வே.பிரபாகரன் வீரராக விளங்குவதாக என பொது பலசேனா வின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய ஊடகவிய லாளர்கள் சந்திப்பில் கலந்து உரையாற்றியபோதே இக் கருத்தை தெரிவித்து ள்ளார். ”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையான வீரர்”; ஞானசார புகழாரம்!
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்திருந்த ஆவர்,
”மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெற்றியடைந்த போதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலை த்திட்டமும் மேற்கொள்ளவில்லை.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பிரபாகரனுக்கு நந்திக்கடலில் நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை. அவர் உண்மையான வீரன். அந்த உண்மையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரி வித்துள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் எந்த அரசியல் கொள்கையில் இருந்தாலும் முன்னாள் சனாதிபதி மஹிந்தவுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் இலங்கையின் வாழ்நாள் அரசனாக மஹிந்த இருக்க வேண்டியவர், ஆனால் அது இடம்பெறவில்லை.
எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு இடம்பெறாததற்குக் காரணம் அவரைச் சுற்றியிருந்த ஆலோசகர்கள் சரியான ஆலோசனைகளை வழங்காதமையே காரணம் என்றார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
”விடுதலைப் புலிகளை போ ரில் வென்றதன்பின்னர் எத்தனையோ அபிவிருத்திகள் மேற்கொண்ட போதும் தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவித வேலைத்திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லையென்றார்.
என்னதான் அபிவிருத்தியை மேற்கொண்டாலும் மக்களின் மனங்களை வெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. போர் வெற்றிகள் கொண்டாடப்படவேண்டும் தான், ஆனால் அந்த மக்களின் உரிமைகளையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்” என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளா ர்.