Breaking News

மகிந்த ஆட்சிக்கால ஊழலுக்கான தீர்ப்பு – லலித் வீரதுங்க, நாயகம் அனுஷ பல்பிட்ட 3 ஆண்டு சிறை

மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை த்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணி ப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூப ணமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடும் வேலை உடனான மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்ட ஈட்டினையும் வழங்குமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் போது தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் (TRC) சொந்தமான ரூபா 600 மில்லியன் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இருவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபண மானதையடுத்து, 

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும்  குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றத்தி னால் தீர்ப்பளித்தது. 

குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு மேற்கொள்ளவுள்ள லலித் வீரதுங்கவின் வழக்கறிஞர் காலிங்க இந்திரதிசா தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பாக் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.