சுவிஸில் கிளிநொச்சி தமிழ் அகதி துப்பாக்கிச் சூட்டினால் கொலை !
சுவிட்சர்லாந் பிரிசாகோ நகரில் அக திகள் நிலையம் ஒன்றில் நேற்று அதி காலையில் சுவிஸ் காவல்துறையி னரால் இலங்கைத் தமிழ் அகதி ஒரு வர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளனர்.
அகதிகள் வதிவிடத்தில் தங்கியிருந்த வர்கள் மத்தியில் மோதல்கள் நடை பெறுவதாக கிடைத்த தகவலை அடு த்து நேற்று அதிகாலை 2 மணியளவில் சுவிஸ் காவல்துறை அதிகாரிகள் இரு அகதிகளை அழைத்துச் சென்றுள்ளனர். அகதிகள் நிலையத்தில் இருந்த 38 வய துடைய இலங்கைத் தமிழ் அகதி ஒருவர், இரண்டு கத்திகளுடன், காவல்து றையினர் அழைத்துச் சென்ற இரண்டு அகதிகளும் தாக்க முற்பட்டதால்,
உடனடியாக காவல்துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கத்தியுடன் இருந்த இலங்கைத் தமிழ் அகதி மரணமானார்.
ரிசினோ மாகாணத்தில் உள்ள பிரிசாகோ நகரில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக, சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என தகவல் வெளியா கியுள்ளது.