உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்கள் நிறைவேறும் வாய்ப்புள்ளதாக !
மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டங்கள் தொட ர்பான விவாதம் பாராளுமன்றில் நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அச்சட்ட மூலங்கள் பெரும்பாலும் நிறைவே றும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற னவாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரணமாக திங்கட்கிழமைகளில் பாராளுமன்றம் ஒன்றுகூடுவதி ல்லை. எனினும், மேற்கூறிய விடயங்களுக்காகவே விசேடமாக நாளை பாராளுமன்றம் ஒன்று கூடவுள்ளமை தெரிவிக்கக்கூடியது.
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில் ஏற்படும் துண்டு விழும் தொகையினை எவ்வாறு நிரப்புவதென்ற தொடர்பில் நவம் பர் 10 ஆம் திகதி நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்ட உரையில் விரிவுபடுத்தப்படும்.
நிதியமைச்சரினால் பாராளுமன்றில் வரவு, செலவுத்திட்ட உரை வழங்குவ தற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளு மன்றில் வழங்கப்பட வேண்டும்.
அதனடிப்படையிலேயே நாளை 2018 ஆம் ஆண்டு க்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.