ரக்ஷ்சா' திட்டத்திற்குத் தேவையான நிதி அரசால் வழங்கப்படுமென-ரணில் விக்ரமசிங்க !
என்றும் காப்போம் தேசத்தின் பிள்ளைகளை' எனும் கருப் பொரு ளில் பாடசாலை மாணவ மாணவிக ளுக்காக தொடக்கப்பட்ட 'சுரக்ஷ்சா சிறுவர் காப்புறுதி' திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க கலந்ததுடன் 'சுரக்ஷ்சா சிறுவர் காப்புறுதி' திட்டத்திற்குத் தேவை யான நிதி ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார். மேலும் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை ஈடுபடுத்த முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளினால் இவ்வாறான நிதி வழங்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று அலரி மாளிகையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் மேலும் கருத்து வௌியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பிள்ளைகளுக்கு ஏற்படும் சுகயீனங்களுக்கான செலவுகளை ஈடுசெய்ய சில பெற்றோரால் முடியாதுள்ளது.
எனவே சுதந்திரக் கல்வி ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டின் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் இச் செயற்பாட்டை தொடங்கியுள்ளதாகவும், மேலும் மாணவ, மாணவிகளே நாட்டின் முக்கிய மான வளம் என ரணில் விக்ரமசிங்க விவரித்துள்ளார்.








