Breaking News

இன்று வீடு ­தி­ரும்­பு­வ­தற்கு வைத்­தி­யர்கள் அனு­மதி - எதிர்க்கட்சித் தலைவர்

உடல்­நிலை மோச­ம­டைந்த நிலை யில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி க்­கப்­பட்­டி­ருந்த எதிர்க் கட்­சித் ­த­லை­வ ரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இன்று வீடு திரும்­பு­வதற்கு வைத்­தி­யர்கள் அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரிவித்துள்ளன. 

எதிர்க்­கட்­சித் ­த­லைவர் இரா.சம்­பந்தன் திரு­கோ­ண­ம­லையில் இருந்து கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பு திரும்­பி­யி­ருந்த நிலையில் அன்­றை­ய ­தினம் முற்­பகல் சுகயீனம் கார­ண­மாக கொழும்பில் உள்ள தனியார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். 

வைத்தியசாலையில் தங்­கி­யி­ருந்து சிகிச்­சை­களை பெறு­வதே சிறந்­தது என்று வைத்­தி­யர்கள் வழங்­கிய ஆலோ­ச­னைக்கு அமை­வாக தொடர்ச்­சி­யாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வரையில் நான்கு தினங்­க­ளாக மருத்­துவ சிகிச்­சை­களை பெற்­றி­ருந்தார். 

இந்­ நி­லையில் அவ­ரு­டைய உடல் நிலை தொடர்பில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் வைத்­தி­யர்கள் கவனம் செலுத்­தி­னார்கள். இதன்­போது அவரின் உடல் நிலைமை முன்­னேற்­ற­ம­டைந்­த­தை­ய­டுத்து இன்று வீடு திரும்­பு­வ­தற்கு அனு­மதி வழங்கப்பட்டுள்ளது. 

அண்­மைய தினங்­க­ளாக சளித்தொல்லை கார­ண­மாகவே எதிர்க்­கட்­சித்­த­லை­வரின் உடல் நிலை பாதிக்கப்­பட்­டு காணப்பட்டுள்ளார்.