Breaking News

பாகிஸ்தான் இராணுவத் தளபதி தலதா மாளிகைக்கு விஜயமாகியுள்ளார் ! (காணொளி)

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி யான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா பௌத்த மக்களின் பெருமதிப்பிற்குரிய தலமாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத் தளபதி, இன்றைய தினம் வியாழக்கிழமை நாடு திரும்புகின்றார். ஸ்ரீலங்கா இரா ணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் அழைப்பை ஏற்று கட ந்த 15ஆம் திகதி ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்த பாகி ஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா ஸ்ரீலங்காவின் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். 

நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படு த்தும் நோக்கில் ஸ்ரீலங்காவுக்கு விஜயத்தை மேற்கொண்ட அவர், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிருந்தார். 

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு பாகி ஸ்தான் இராணுவத் தளபதி விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். முக்கிய பிரமுகர்கள் கையெழுத்து இடுகின்ற புத்தகத்தில் தனது கையெழு த்தை பதிவு செய்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி தலதா மாளிகையிலிரு ந்து திரும்பியுள்ளதுடன், இன்றைய தினம் அவர் நாடு திரும்பவுள்ளார்.