Breaking News

ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரின் வாகனத்திற்கு தீ வைப்பு !

நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீ மின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களி னால் தீ வைப்பு.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை செய்லான் வீதியில் நடைபெற்றதுடன்  குறித்த வாகானம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.