ஊவா மாகாண சபையில் தாக்குதல், நிலைமை பதட்டம் - பொலிஸார் குவிப்பு.! - THAMILKINGDOM ஊவா மாகாண சபையில் தாக்குதல், நிலைமை பதட்டம் - பொலிஸார் குவிப்பு.! - THAMILKINGDOM

 • Latest News

  ஊவா மாகாண சபையில் தாக்குதல், நிலைமை பதட்டம் - பொலிஸார் குவிப்பு.!

  ஊவா மாகாண சபையில் பெரும் பத ற்றம் நிலவுவதாகவும் அங்கு கலக மடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில், கட்சி தாவிய மாகாணசபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.எம். ரத்னாயக்கவின் வாகனத்தில் ஏறி சபைக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பத வியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர். ஊவா மாகாண சபை க்குள் கட்சி தாவிய கணேசமூர்த்தி உள்நுழைகையில் மீது தாக்குதல் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

  இதேவேளை, அங்கு நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பி னரான உபாலி சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குத லில் காயமடைந்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அம்பியூலன்ஸ் மூலம் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

  சம்பவத்தையடுத்து ஊவா மாகாணசபை வளாகத்தில் பல மடங்கு பொலி ஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றம் நிலவுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், சபை அமர்வு ஆரம்பமானதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பி னரொருவர் தாம் சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லையெனவும் இராணு வத்தினருடன் தான் சபைக்கு வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.

  அதையடுத்து புதிதாக மாகாணக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் தொண்டமானும் தமக்கு சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு வழங்குமா றும் சபையில் தெரிவித்தார். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த முதலமை ச்சர் இது தொடர்பில் தான் சட்டபூர்வமான நடடிவக்கை மேற்கொள்வதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

  சம்பவம் நடந்ததை கேள்வியுற்று அப்பகுதிக்கு விரைந்த அமைச்சர் ஹரீன்பெ ர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஊவா மாகாண சபையில் கூடியிருந்த பொது மக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டு ள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஊவா மாகாண சபையில் தாக்குதல், நிலைமை பதட்டம் - பொலிஸார் குவிப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top