தீவிரமடையும் அரசியல் பர பரப்பு - இன்று மாலை ஜனாதிபதியுடன் பல தரப்பினர் சந்திப்பு.!
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுடன் விசேட சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிர தமர் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்க ம் அமைப்பது தொடர்பில் பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.