வவுனியாவிலும் ஏனைய கட்சிகளை எதிர்ப்பார்க்கும் நிலையில் த.தே.கூட்டமைப்பு!
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் 4 மன்ற ங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை, வவுனியா செட்டி குளம் பிரதேசசபை, வவுனியா வடக்கு பிர தேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிர தேச சபை என்பவற்றில் சிங்கள பிரதேச சபையினை தவிர்ந்த ஏனைய நான்கு உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் தேசி யக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வவுனியா நகரசபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக்கூட்டணி 3 ஆச னங்களையும் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சி 3 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயககட்சி, பொதுஜனபெரமுன ஆகியன தலா ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதுடன் மொத்தமாக 21 ஆசனங்கள் கிடை த்துள்ளன.
இந் நிலையில் 11 ஆசனங்களை பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ள போது தமிழரசுக்கட்சி தனது 8 ஆசனங்களுடன் மேலும் 3 ஆசன ங்களை பெறவேண்டிய நிலை உள்ளது.
இந் நிலையில் வவுனியா வடக்கு பிர தேசசபையில் தமிழ் தேசியக்கூட்ட மைப்பு 8 ஆசனங்களையும் பொதுஜனபெர முன 5 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக்கூட்டணி 3 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்தி ரக்கட்சி 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தை யும் ஜே.வி.பி 1 ஆசனத்தினையும் பெற்றுள்ளது.
இச் சபையினை கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சி அமைப்ப தற்கு 13 ஆசனங்களை தேவையாக கொண்டுள்ளது.
எனவே மேலதிக 5 ஆசன ங்களையும் ஏனைய கட்சிகள் மூலமான ஆதரவினூடாக பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 30 ஆசனங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி தலா 4 ஆசனங்களையும் சுயேற்சைக்குழு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி என்பன தலா 2 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன தலா 1 ஆசனத்தினையும் பெற்றுள்ளது.
இந் நிலையில் 16 ஆசனங்கள் உள்ள கட்சி ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேலும் 5 ஆசனங்களை ஏனைய கட்சி கள் மூலம் கூட்டுச்சேர்ந்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் செட்டிகுளம் பிரதேச சபையில் 19 ஆசனங்கள் உள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஸ்ரீலங்க சுதந்தி ரக்கட்சி 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 4 தமிழர் விடுதலைக்கூட்ட ணிய 3 ஆசனங்களையும் பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன தலா 1 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
இந் நிலையில் செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழ் சேதியக்கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு மேலும் 5 உறுப்பினர்கள் தேவையாகவுள்ளது.
இச் சூழ லில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அனைத்து சபைகளிலும் கணிசமான உறுப்பி னர்களின் ஆதரவை பெற்றே ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ள வேளை யில் யாருடன் கூட்டுச்சேர்வார்கள் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தம்மை பழி சுமத்தி வந்த தமிழர் விடு தலை க்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். பாராளுமன்ற உறுப்பி னர் சிவசக்தி ஆனந்தனின் வழிநடத்தில் வெற்றியீட்டியுள்ள உறுப்பினர்களு டன் இணைவதா அல்லது தேசியக்கட்சிகளுடன் கூட்டுச்சேர்வதா என்ற நிலை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.
எனினும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ப தற்கு இணங்க தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க வேண்டுமென வவுனியா மக்கள் தமது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
எனவே இது தொடர்பாக கட்சிகளுக்கிடையிலான சமரச முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் வவுனியாவில் ஒழு குழு தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.