
2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்று அலரிமாளிகையில் ஆலோசனை நடத்தியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள செய்தியை அவதானத்தில் எடுத்துக்கொண்டு எதிர்வரும் நாட்களில் சிலபல மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளலாம்.
ஆனாலும் நல்லாட்சி அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு பதவிக்காலம் பூர்த்தி ஆகும்வரை முன்னோக்கிச் செல்வோமென பிரதமர் தெரிவித்துள்ளார்.