ஊழலுக்கு எதிரான எனது நகர்வில் எவ்வித மாற்றமும் கிடையாது.!
ஊழல் மோசடிக்கு எதிரான எனது கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி த்துள்ளாா்.
பொலன்னறுவை கிரித்தலே குடியே ற்றத்தில் உள்ள கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளி க்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தா்.
மேலும் தெரிவிக்கையில்....
”எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட த்தின் கீழ் 06 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது நாட்டின் விவசாய சமூகத்திற்கு முன்னைய எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உலர் வலயத்தில் 2400 குளங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும்.
இதன் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டும் 123 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக மாவட்டத்தில் உள்ள மக்கள் முகங்கொடுத்த நீர் தொடர்பான பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் நிரந்தரமாக தீர்த்து வைக்கப்படும்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 240 பாடசாலைகளில் 142 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு தேவையான வசதிகளை வழங்குவதைப்போன்று பரீட்சைகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் உள்ள பலவீனங்களை இனங்கண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தவுள்ளேன்.
எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டில் ஊழல் இல்லாத சமுதாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களையே நான் முன்னெடுத்து வருகின்றேன். எனினும் ஊழல் குற்றங்களை ஒழிக்கும் எனது வேலை த்திட்டங்களை நான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை.
ஊழல் மோசடிக்கு எதிரான எனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் நடைபெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளாா்.