அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென - வாசுதேவ !
அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்காது உடனடியாக அர சாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக இடது சாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசு தேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி பதவியை இரத்துச் செய்ய வேண் டுமென மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டம் குறி த்து கருத்து வெளியிடும் போதே இவ் வாறு விவரித்துள்ளாா்.
அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் என சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் அதுவரை காத்திருக்காது மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கொண்டு வரும் யோசனைகள் குறித்து நிதானமாக செயற்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளாா்.