Breaking News

எதிர்கட்சித் தலைவரை பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் - மனோ.!

புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாது விடத்து ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இருப்பதில் எந்தவித பய னும் இல்லையென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமை ச்சர் மனோ கணேசன் தெரிவித்து ள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா். 

நாட்டின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே அரசியல் சாசன சபை உருவாக்கப்பட்டு அரசியல் சாசன நடவடிக்கைக்குழுவொன்றும் அமைக் கப்பட்டதாகத் தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன் எனினும் அந்த நட வடிக்கைக் குழு எங்கு போனது என்றே தெரியாதென விசனம் வெளியிட்டார். 

இதனால் உடனடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை தொடர்பு கொண்டு அரசியல் சாசனத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நடவடி க்கைக் குழுவை மீண்டும் செயற்படுமாறு எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்த வேண்டுமென அவரை சந்தித்து கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் மனோ தெரிவித்து ள்ளாா். 

புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணிகள் மீள ஆரம்பிக்காது விடின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் சம்பந்தன் இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மனோ கணேசன் அதனால் அவரை எதிர்கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகிடுமாறு கேட்டுக்கொண்டதாக வும் தெரிவித்துள்ளாா்.  

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அணியினர் குற்றம் சாட்டுவது போல் ஒட்டு மொத்த நாட்டிற்குமான எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் செயற்பட வில்லை என்பது உண்மை தான் எனக் ஏற்றுக்கொண்ட மனோ கணேசன் எனி னும் மஹிந்த தரப்பினர் கூறுவது போல் எதிர்கட்சித் தலைவர் என்பதற்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட வேண் டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்துள்ளாா்.

எவ்வாறாயினும் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பிலும் தலையி டாத எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் குறைந்தபட்சம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தயாரிக்கத் தீர்மானித்த புதிய அரசியல் சாசன விவகாரத்திலாவது தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென  எச் சரிக்கை விடுத்துள்ளாா்.