Breaking News

அன்னை பூபதி நினைவில் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி!

தேசத்தின் வேர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னை பூபதி யின் 30வது நினைவு தினத்தையொட்டிய உதைபந்தாட்டப் போட்டியின் இறு திச் சுற்றில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி யுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் கணேசன் பிரபாகரன் தலை மையில் இறுதிப் போட்டியும் வெற் றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (18-04-2018) புதன் கிழமை மாலை நடைபெற்றது. இறு திப் போட்டியில் புன்னச்சோலை கோப்றா அணி மற்றும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழக அணிகள் மோதின.

போட்டி ஆரம்பித்து 08 நிமிடங்களில் கோப்றா அணி கோல் காப்பாளரின் முறையற்ற ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கோப்றா அணி வீரர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

அதனால் போட்டி இடை நிறுத்தப்பட்டு இறுதியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் முதலி டத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் இரண்டாமிடத்தை புன்னைச் சோலை கோப்றா அணியும் பெற்றுக் கொண்டன.

சிறந்த கோல் காப்பாளருக்கான கிண்ணத்தை புன்னைச்சோலை கோப்றா அணி வீரரும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கிண்ணத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வீரரும் பெற்றுள்ளனா்.